ISO 9001:2015 Certified

Testimonial

Items: 110 of 31

மகத்தான சேவைமயம்

மகத்தான சேவைமயம்

நான் சில வருடங்களாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். எனது தோட்டத்தில் 2.5 ஏக்கர் செடி முருங்கை பயிர் செய்து வருகிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை கொடிசியாவில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியை காண வந்து இருந்தேன். அப்பொழுது, “தாரா புளூம்ஸ்” மாத இதழை உங்கள் நிறுவன ஊழியர் வழங்கினார். தோட்டத்தில் வேலை செய்து விட்டு களைப்பான நேரத்தில் விவசாயம் சம்பந்தபட்ட விவரங்களை படிப்பது என் வழக்கம். அந்த வகையில் தங்களது தாரா புளூம்ஸ் புத்தகத்தை படித்தேன். என் தோட்டத்தில் விளையும் முருங்கை செடியில் இருந்து கிடைக்கும் இலைகளை, கீரைகளாக பக்குவப்படுத்தி கோவை நகரில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளேன். கீரையை பக்குவப்படுத்த ஒரு வழியைத் தேடி தங்களது நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இது சம்பந்தமாக, எனக்கு ஒரு நிறுவன அலுவலரின் தொலைபேசி எண்ணை உங்கள் ஊழியர் வழங்கினார். அவரை நான் நேரில் சந்தித்து பேசினேன். அவர் சில தகவல்களை எனக்கு தபால் வழியாகவும் கூறியுள்ளார். தாங்கள் இப்படியொரு நிறுவனத்தை ஆரம்பித்து மாத இதழ் வாயிலாக விவசாய சமுதாயத்திற்கு ஆற்றி வரும் சேவை மகத்தானது, மறக்க முடியாதது. இது போன்ற உடனடி சேவைகளை வழங்கும் Farmer.Live இணையதளம் வருங்காலத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். தொடர்புக்கு: திரு. S. சண்முகம் (விவசாயி) - +91 93849 62799, திருப்பூர்.

Author : திரு. S. சண்முகம் (விவசாயி)
Posted Date : Dec 11, 2019, 01:16
தலைசிறந்த வேளாண் இதழ்

தலைசிறந்த வேளாண் இதழ்

நான் திருமாளவன், சிதம்பரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாய. கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் “தாரா புளூம்ஸ்” மாத இதழை பற்றி அறிந்தேன், ஆனால் அங்கு வாங்க